கிராமம் முழுவதும் வலம் வந்த குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர்

குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கிராம ஊர்வலம் கடந்த வியாழக்கிழமை (22.08.2024) மாலை-03 மணியளவில் மேற்படி ஆலயத்திலிருந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களுடன் ஆரம்பமாகியது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறியரக உழவியந்திரத்தில் கிராமம் முழுவதும் விநாயகப் பெருமான் வீதி உலாவாகச் சென்று மறுநாள் வெள்ளிக்கிழமை (23.08.2024) அதிகாலை-01.30 மணியளவில் மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானுக்குப் பிராயச்சித்த அபிஷேகமும் இடம்பெற்றது. 

(செ.ரவிசாந்)