மூளாயில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம்

இந்தியா றோட்டறிக் கழகங்கள், நல்லூர் றோட்டறிக் கழகம் மற்றும் சுழிபுரம் றோட்டரக்ட்  கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை சனிக்கிழமை (24.08.2024) காலை-09 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை மூளாய் ஸ்ரீவதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அரங்கில் இடம்பெறவுள்ளது.

குறித்த மருத்துவ முகாமில் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், குருதியமுக்கப் பரிசோதனை, எச்.ஐ.வி துரித பரிசோதனை, நீரிழிவுப் பரிசோதனை போன்ற பல்வேறு சேவைகளும் வழங்கப்படும். எனவே, இந்த மருத்துவ முகாம் நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றிப் பயன்பெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 0772988917, 0776154790 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.