யாழ்.போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் ஓ பாசிட்டிவ் குருதிக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் ஓ பாசிட்டிவ் இரத்த வகைக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  

எனவே, இந்த வகைக் குருதியை உடையவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.