இவ் வருடத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 40 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.09.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றையதினம் நாடளாவிய ரீதியில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.