தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை: யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!


நாடளாவிய ரீதியில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை  இன்று (15.09.2024) காலை-09.30 முதல் பிற்பகல்- 12.15 வரை நடைபெறவுள்ளது.

இப் பரீட்சையானது யாழ்.மாவட்டத்தில் 95 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதால் காலை-09 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை பரீட்சை நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செயற்படுமாறும், பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்குமாறும் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்