கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கோண்டாவில் ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (15.09.2024) மாலை-05 மணி முதல் மேற்படி ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கோண்டாவில் ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் வேலணைப் பிரதேச செயலாளர் கயிலாசபிள்ளை சிவகரன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா, கோண்டாவில் தென்கிழக்குப் பகுதிக் கிராம அலுவலர் திருமதி.விஜிதன் பவித்ரா, குமரன் விளையாட்டுக் கழகத்தின் கனடாக் கிளை உறுப்பினர் இராசையா சிறீகாந்தன் தம்பதியினர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.நிகழ்வில் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து, வயலின் இசை விருந்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்வுகளும் மற்றும் பரிசில் வழங்கலும் இடம்பெறுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.