வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை உப அலுவலக ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய வீதிகள், வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய வீதிகள், பிரதேச சபைக்குரிய வீதிகளில் வாகனங்கள் நிறுத்துதல், கட்டடப் பொருட்கள், பழைய பொருட்கள், வியாபாரப் பொருட்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சாரதா உருத்திரசம்பவன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட செயற்பாடுகளால் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதையும், வீதி விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதையும் கருத்திற் கொண்டு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள 1987ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டம் பிரிவு- 65 இன் கீழ் உள்ள பொதுவழிகள் ஒழுங்குபடுத்தல் விதிகளிற்கு அமைவாகவே குறித்த அறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார்.