இலக்கியவெளியின் ஆறாவது அரையாண்டு இதழாகிய ஈழத்து எழுத்தாளர் 'வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ்' வெளியீட்டு நிகழ்வு நாளை சனிக்கிழமை (14.09.2024) மாலை-03.30 மணி முதல் அம்மன் வீதி, நல்லூரில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வெளியீட்டுரையை ஆற்றுவார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சு.கபிலன், எழுத்தாளர் சி.விமலன், கவிஞர் கருணாகரன், கலாசார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்துவர்.
ஆர்வலர்கள் அனைவரும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.