தமிழ்ப்பொதுவேட்பாளரை ஆதரித்து யாழ்.நகரில் இன்று பொதுக் கூட்டம்

எதிர்வரும்-21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (16.09.2024) மாலை-03 மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் ஆரம்பமாகி  நடைபெறவுள்ளது.

நிகழ்வில் மூத்த போராளி மு.மனோகர் (காக்காண்ணை), அரசியல், சமூகச் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் ஆற்றவுள்ளனர்.