மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே யாழ்.வருகிறார்

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவன் போபகே நாளை சனிக்கிழமை (14.09.2024) ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் பலவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் வருகை தருகிறார்.

நாளை காலை யாழ்.நகரில் துண்டுப் பிரசுர விநியோகத்தில் கலந்து கொள்வதுடன் முற்பகல்-10 மணிக்கு யாழ்.கொக்குவிலில் ஊடக சந்திப்பில் கலந்து கொள்கிறார். நாளை மாலை-03.30 மணிக்கு கொக்குவில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முருகையன் கேட்போர் கூடத்தில் சமூக அக்கறையாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் கலந்து கொள்ளும்  ஒன்றுகூடலில் கருத்துரை வழங்குவார். 

நாளை மாலை-06 மணிக்குப் புத்தூர் கலைமதி கரபந்தாட்ட மைதானத்தில் இடம்பெறும் பகிரங்கப் பொதுக் கூட்டத்தில் நுவன் போபகே கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.