எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் தொகுதிகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ) சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்குள் தகுதி உடையவர்களை இனம் கண்டு கட்சியின் முழு இணக்கப்பாட்டுடனும், கட்சியின் முழுமையான ஒத்துழைப்புடனும் வெற்றிபெறத் தகுதியுடைய பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவு செய்து நிறுத்தக் கட்சியின் மத்திய குழுவினை உடனடியாகக் கூட்டும்படி கட்சியின் செயலாளர் நாயகமான தங்களைக் கோருகின்றேன் என ரெலோ கட்சியின் நிர்வாகச் செயலாளர் விந்தன் கனகரட்ணம் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரத்திடம் (ஜனா) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதெனக் கட்சியின் தலைமைக்குழு மற்றும் மத்திய குழு கூட்டங்களையும் தாங்கள் கூட்டியதும் குறிப்பிடத்தக்கது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.