ஏழாலையில் நாளை பொதுக் கூட்டம்

ஏழாலை சொர்ணாம்பிகை சமேத அம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் பொதுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (29.09.2024) முற்பகல்-10 மணி முதல் மேற்படி ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பரிபாலன சபையின் தலைவர் நா.இலட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில் தற்கால நிலைமை தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளமையால் அனைத்து அடியவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.