தமிழ்மக்கள் சுயாட்சி பெற்று மகிழ்வோடு வாழ வேண்டி அடுத்த மாதம்-15, 16 ஆ,ம் திகதிகளில் யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்துசமயப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் நடராஜப் பெருமானுக்கு விசேட ஹோமங்கள் நடாத்தப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு 15 ஆம் திகதி மாலை நடைபெறும் நிகழ்வில் கடந்தகாலப் போரில் தாய், தந்தையரை இழந்த பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள பல குடும்பங்களுக்குத் தலா-10, 000 ரூபா வீதம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பணிக்கு உதவ விரும்புவோர் A/C No 1060024270 என்ற இந்துசமயப் பேரவையின் கொமர்ஷல் வங்கிக் கணக்கு ஊடாகப் பணம் அனுப்பி உதவ முடியுமென இந்துசமயப் பேரவையின் தலைவர் ஈசான. சிவசக்திகிரீவன்.தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு 0761688277, 0212226048 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.