பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்காலப் பாதீட்டினைப் புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்குப் புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.