நல்லூரில் பேரெழுச்சியுடன் தியாகதீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

தியாகதீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் நாளை வியாழக்கிழமை (26.09.2024) முற்பகல்-10.48 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தியாகதீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்  குழுவின் ஏற்பாட்டில் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.   

இதனை முன்னிட்டுத் திலீபனின் அவரது உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி அவர் பிறந்த ஊரெழு மண்ணிலிருந்து நாளை காலை-07 மணியளவில்   நடைபயணமாக ஆரம்பிக்கப்பட்டு நல்லூர் தியாகதீபம் நினைவுத்தூபியைச் சென்றடையும். அனைத்து மக்களையும் உணர்வெழுச்சியுடன் நிகழ்வில் பங்கேற்குமாறு தியாகதீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.