ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ் வகையில் வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகனும், கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாகாண ஆளுநர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி இன்று புதன்கிழமை (25.09.2024) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.