சண்டிலிப்பாயில் முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டி

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகம் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள  முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை (26.09.2024) காலை-09.30 மணி முதல் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் கோவில் முன்பாக இடம்பெறும்.

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்ற முடியும். குறித்த போட்டியில் மேற்படி வயதுப் பிரிவினரைத் தவறாது பங்குபற்றுமாறும்  சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.