இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் அமரர்.சிவகுருநாதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (24.09.2024) இரவு-07.15 மணி முதல் இளவாலை வாலிபத் திடலில் நடைபெறவுள்ளது.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உப செயலாளர் பி.டர்சிகன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். அனைவரையும் குறித்த போட்டியில் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.