புதிய சப்பரத்தில் கோண்டாவில் அற்புதநர்த்தனர் பவனி

யாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று வியாழக்கிழமை (05.09.2024) இரவு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது இவ் ஆலயத்திற்கென இம்முறை புதிதாக அமைக்கப்பட்ட, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வரும் திருக்காட்சி   இடம்பெற்றது.           

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை (06.09.2024) முற்பகல்-10 மணியளவில் விநாயகப் பெருமானின் தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.