நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரின் பெருவிழா ஆரம்பம்

யாழ்.நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பெருவிழா விநாயகர் சதுர்த்தி நன்னாளான நாளை சனிக்கிழமை (07.09.2024) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பதினொரு தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும். எதிர்வரும்-15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 16 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.