யாழில் நாளை விவசாயக் கண்காட்சி ஆரம்பம்


வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  "காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சூழல் நேயமான  நிலைபேறான விவசாயம் நோக்கி"  எனும் தொனிப் பொருளிலான விவசாயக் கண்காட்சி நாளை புதன்கிழமை (02.10.2024) காலை-09.30 மணியளவில் திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார்.