யாழில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவரங்கம்



யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவரங்கம்-2024 நாளை வெள்ளிக்கிழமை (04.10.2024) மாலை-04 மணியளவில்  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூதுக் கலையகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உப தலைவர் அருட்பணி.ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தொடக்கவுரையையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வாழ்த்துரையையும், யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் குரு மாணவன் அன்ரனிகுமார் அனோஜன் மாணவர் உரையையும் நிகழ்த்துவர். 

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன் அருணாச்சலத்தின் வகிபாகம் - தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரை உள்நிறுத்திய பார்வை எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் ச.லலீசன் நினைவுப் பேருரையாளருக்கான அறிமுகத்தை வழங்கவுள்ளதுடன் திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் யோன்சன் ராஜ்குமார் கருத்துரை வழங்குவார்.