ஜனாதிபதி அநுர- டக்ளஸ் தேவானந்தா திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை முன்னாள் கடற்தொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இன்று வெள்ளிக்கிழமை (25.10.2024) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

சமகால நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேற்படி சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் இணைந்திருந்தனர்.