நிர்ணயவிலையை மீறி அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக அமைச்சுத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் 218 ரூபாவுக்கு நாட்டரிசியைச் சந்தைக்கு விநியோகிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர். இதற்கமைய, நாட்டரிசியை 220 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.