வாக்களிக்கும் முறைமை தொடர்பில் யாழில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்.மாவட்டத்தில் அதிகமாகக் காணப்பட்டமையைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்கவுள்ள யாழ்.மாவட்டத்தின் ஒவ்வொரு திணைக்களத்தையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெளிவுபடுத்தும் விழிப்புணவுக் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (25.10.2024) மாலை-03.15 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் பங்குபற்றுபவர்கள் அவர்களுடைய திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.