சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (06.10.2024) காலை-09.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்.மாவட்ட ஓய்வுநிலை மேலதிக அரசாங்க அதிபர் செ.ஶ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஓய்வுநிலை விரிவுரையாளர் அ.குமாரவேல், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி.பரமேஸ்வரி சிவனொளிபாதம், யாழ்ப்பாணம் தேசிய இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி.வினோதினி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் நிகழ்த்தவுள்ளனர்.
நிகழ்வில் தொண்டைமானாற்றைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த 70 ஆண், பெண் முதியோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், வடலியடைப்பு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், வில்லிசை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறுமென சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.