சிறப்புற்ற நல்லூரானின் மானம்பூத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த நவராத்திரியின் விஜயதசமித் திருநாளை முன்னிட்டு மானம்பூத் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை (12.10.2024) காலை  சிறப்பாகவும்,  மிகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.  

நேற்றுக் காலை-06.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தன் முத்துக்குமாரசுவாமி வடிவினராக அடியவர்கள் புடைசூழ உள்வீதியில் எழுந்தருளிப் பின்னர் வெளிவீதியில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து ஆலய வெளிவீதியில் மானம்பூத்  திருவிழா (வன்னி வாழைவெட்டு) இடம்பெற்றது. 

அத்துடன் சிறார்களுக்கான வித்யாரம்ப  நிகழ்வும் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான அடியவர்கள் மானம்பூத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.