மதுபானசாலைகள் திறப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்: தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்

வலிகாமம் வடக்குப் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் மதுபானசாலைகளைத் திறப்பதற்கான அனுமதியை உடன் இரத்துச் செய்யக் கோரி வலிகாமம் வடக்குச் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் நாளை திங்கட்கிழமை (14.10.2024) முற்பகல்-09 மணியளவில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் முன்பாக நடாத்தப்படவுள்ளது.         

போராட்டத்தின் நிறைவில் வலிகாமம் வடக்குப் பிரதேச மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் தெல்லிப்பழைப் பிரதேச செயலரிடம் கையளிக்கப்படவுள்ளது. எனவே, இப் போராட்டத்தில் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு  போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.