அகில இலங்கை ரீதியிலான 16 வயது ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி தற்போது அனுராதபுரத்தில் நடைபெறுகின்றது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை (12.10.2024) நடைபெற்ற போட்டியில் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரி அணி அனுராதபுரம் மகஷஸ்வேவ பாடசாலைக்கு எதிராக 02-01 என்ற கணக்கிலும் ,நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.10.2024) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கு எதிராக 02-01 என்ற கணக்கிலும் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டியில் கண்டி ரிண்டிக் கல்லூரியை 01-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இறுதிப் போட்டி இன்று திங்கட்கிழமை (14.10.2024) காலை-08.30 மணியளவில் அனுராதபுரம் சுபர்ணபாலிக கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் புத்தளம் வத்தளை அசங்குறு மகாவித்தியாலயத்துடன் வயாவிளான் மத்திய கல்லூரி அணி மோதியிருந்தது. இந் நிலையில் போட்டி முடிவுகளின் அடிப்படையில் வயாவிளான் மத்திய கல்லூரி அணி இரண்டாமிடம் பெற்றுச் சாதித்துள்ளது.