திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் வாகனங்களுக்கான தரிப்புக் கட்டணம் அறவிடும் ஊழியருக்கும் பொதுமகனொருவனுக்குமிடை யில் கடந்த செவ்வாய்க்கிழமை (12.11.2024) காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு முன்பாக நபரொரு வர் மோட்டார்ச் சைக்கிளை நிறுத்திவிட்டு வர்த்தக நிலையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்த பின்னர் தனது மோட்டார்ச் சைக்கிளை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது வாகனங்களுக்கான தரிப்புக் கட்டணம் அறவிடும் ஊழியர் குறித்த நபரை நோக்கித் தரிப்புக்கான கட்டணம் கேட்டுள்ளார். அப்போது தர முடியாது என்று குறித்த நபர் கூறியதுடன் குறித்த ஊழியரை நோக்கி அநாகரிகமான வார்த்தைகளாலும் ஏசியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் வர்த்தகர்கள் மற்றும் அப்பகுதியில் நின்ற சிலரின் தலையீட்டினால் முரண்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு அருகில் முன்னர் வாகனங்களை நிறுத்துவதற்கெனத் தனியானதொரு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்த போதும் தற்போது அவ்வாறான வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், இதனால், இவ்வாறான முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர் பில் நல்லூர் பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு முன்பாக நபரொரு
திருநெல்வேலிப் பொதுச் சந்தைக்கு அருகில் முன்னர் வாகனங்களை நிறுத்துவதற்கெனத் தனியானதொரு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்த போதும் தற்போது அவ்வாறான வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், இதனால், இவ்வாறான முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்