பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை (14.11.2024) காலை-07 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. இன்று மாலை-04 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களிலும் இம்முறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 7140, 354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் 8361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நாடளாவிய ரீதியில் 13, 421 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று இடம்பெறுகிறது. வாக்கெடுப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லும் பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.