அனைத்துப் பாடசாலைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமையும் (13.11.2024), நாளை மறுதினம் வியாழக்கிழமையும் (14.11.2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் நாளை மற்றும் நாளை மறுதினம் மூடப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பிலான அறிவுறுத்தல் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.