அறுகம்பைப் பிரதேசம் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை அறுகம்பைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கடந்த- 23 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் பாதுகாப்புத் தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. இந் நிலையில் பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனையை விலக்கிக் கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.