ஆமைச் சின்னத்தை தவறாகச் சித்தரித்து மாதிரி வாக்குச் சீட்டு!

 

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் ஆமைச் சின்னத்திற்குப் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் கண்டு பொறுக்க முடியாது அச்சம் கொண்டுள்ள வீட்டுக்  கட்சியினர் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக  சுயேச்சைக் குழு- 12 இன் முதன்மை வேட்பாளர் என்.பி.ஸ்ரீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழரசுக் கட்சியினர் மாதிரி வாக்குச் சீட்டை அச்சிட்டு அதில் தங்கள் சின்னத்திற்குப்  புள்ளடியிட்டுக் காட்டியுள்ளதுடன் சுயேச்சைக் குழு-12 இற்குத் தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப் பெற்ற ஆமைச் சின்னத்தைத் தவறாகவும் அச்சிட்டுள்ளனர். தலைப் பகுதி முன்னோக்கியவாறு பார்வையிலுள்ள ஆமைச் சின்னத்தைத் தலைப் பகுதி எதிர்த் திசையில் அமையுமாறு சித்தரித்து மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஆமையா?,  வேறு பிராணியா? என இனம்காண முடியாதவாறு சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.    

இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையாளருக்கும், யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்கும், யாழ்.மாவட்டச் செயலகத்தில் இயங்கும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான பொலிஸ் பிரிவுக்கும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.