திருநெல்வேலியில் இரத்ததான முகாம்

காளி கோவிலடி சனசமூக நிலையத்தின் எண்பதாவது ஆண்டு அமுத விழாவை முன்னிட்டு மேற்படி சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24.11.2024) காலை- 08.30 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள காளிகோவிலடி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.