பரீட்சை மண்டபப் பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரம் கைபேசிகள் பயன்படுத்த அனுமதி!

திங்கட்கிழமை(25.11.2024) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சை மண்டபப் பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுமெனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை மண்டபப் பொறுப்பதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான தேவை உள்ளமையால் மாத்திரமே அவர்களுக்கும் கைத்தொலைபேசிப்  பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிகப் பரீட்சை மண்டபப் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கைத்தொலைபேசிகளைப்  பயன்படுத்த முடியும். 

இதேவேளை, முன்னதாகப் பரீட்சை மண்டபத்தில் பணிபுரிந்த அனைவரும் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இந்தமுறை கல்விப்பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சை மண்ட உதவிப் பொறுப்பதிகாரிகள் அல்லது கண்காணிப்பாளர்கள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.