கொக்குவிலில் சத்தியசாயி பாபாவின் 99 ஆவது அவதாரதின விழா

பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் 99 ஆவது அவதார தின விழா இன்று சனிக்கிழமை (23.11.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியிலுள்ள சாயி மந்திர் நிலையத்தில் நடைபெறவுள்ளது.  

நிகழ்வில் ஓம்காரம், சாயி காயத்ரி, அஷ்டோத்திரம், சிவபுராணம் ஓதுதல், பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள், பஜனை மற்றும் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் என்பன நடைபெறும். நிகழ்வில் தமிழ்ப் புலமையாளர் கே.எஸ். சிவஞானராஜா கலந்து கொண்டு "அவதாரங்கள் " எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.