வெளியானது சைவப்புலவர், இளஞ்சைவப் புலவர் பட்டத் தேர்வுகளின் பெறுபேறுகள்!

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட சைவப்புலவர், இளஞ்சைவப் புலவர் பட்டத் தேர்வுகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக  அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சைவப்புலவர் பட்டத் தேர்வில் யாழ்.இணுவிலைச் சேர்ந்த கீர்த்திகா றஞ்சன், பத்தனையைச் சேர்ந்த்த இராமன் இராமகிருஷ்ணன், மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி.மனோன்மணி தட்சணாமூர்த்தி ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.

இளஞ் சைவப்புலவர் பட்டத் தேர்வில் வவுனியாவைச் சேர்ந்த சந்திரகுமார் சுலெக்சி, பரந்தனைச் சேர்ந்த தெய்வேந்திரமூர்த்தி செல்வநாயகி, வாழைச்சேனையைச் சேர்ந்த சௌந்தரலிங்கம் சதுஜா, கோரளங்கேணியைச் சேர்ந்த செல்வநாயகம் வதனி, வாழைச்சேனையைச் சேர்ந்த  மகேந்திரன் டினுசா, மட்டக்களப்பைச் சேர்ந்த சாமித்தம்பி கந்தசாமி , மகேதீஸ்வரன் விபகரணி, கல்குடாவைச் சேர்ந்த சந்திரமோகன் டக்சலா, வாழைச்சேனையைச் சேர்ந்த ரவீந்திரன் அபிராமி, பொலன்னறுவையைச் சேர்ந்த கனகலிங்கம் சதுர்ஷனா, வாழைச்சேனையைச் சேர்ந்த தேவராசா ஜெருஷன், வாகனேரியைச் சேர்ந்த பத்மநாதன் விஷாந்தினி, களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த திருத்தணிவாவா ஜெகநாதன், மண்டூரைச் சேர்ந்த தங்கத்துரை யதுசிகா ஆகியோர் சித்தியடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.