உடுவில் ஆலடிச் சிவன் ஆலயத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ( 31.12.2024) காலை-06 மணி முதல் நண்பகல்-12 மணி வரை வருடாந்தத் திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) நடைபெறும் எனவும் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.கந்தசாமிக்குருக்கள் தெரிவித் துள்ளார்.
திருவாசக முற்றோதல் நிகழ்வில் அனைத்து அடியவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் அவர் கேட்டுள்ளார்