இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையினரின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை (28.12.2024) காலை-08 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை வரலாற்றுப் பிரசித்திபெற்ற நாவற்குழி திருவாசக அரண்மனை சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஊக்குவிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. எனவே, நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.