ஆவரங்காலில் சமகால அரசியல் உரையரங்கு

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) மாலை-03 மணி முதல் பருத்தித்துறை வீதி, ஆவரங்கால் கூட்டுறவு நகர் மேல்மாடியிலுள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த  நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.கோசலை மதன் "தமிழ்மக்களும் புதிய அரசியல் அமைப்பும்" எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் "தமிழ்மக்களும் முறைமை மாற்றமும்" எனும் தலைப்பிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.