கீரிமலையில் ஆண்டிறுதி ஒன்றுகூடல்

விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் ஆண்டிறுதி ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) மாலை-04.30 மணியளவில் கீரிமலை கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டமிடல்கள், 2024 ஆம் ஆண்டுக்கான அதிஸ்டலாபச் சீட்டுக்கான வரவு செலவுக் கணக்காய்வு, உறுப்பினர்களது உரை மற்றும் இராப்போசனம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். குறித்த நிகழ்வில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளைத் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.