சீமெந்துக்காக விதிக்கப்பட்ட செஸ் வரியைக் குறைக்கும் நிதியமைச்சின் யோசனைக்கு அரச நிதி தொடர்பான தெரிவுக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ டி சில்வா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சீமெந்துப் பொதியொன்றின் விலை சுமார்-100 ரூபாவால் குறைவடையுமென நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.