குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் தொடர்பாகவும், ஆலயத்தில் செய்ய வேண்டியுள்ள புனருத்தாரண வேலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (17.01.2025) மாலை-05.30 மணியளவில் மேற்படி ஆலயத்தில் விசேட பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த விசேட பொதுக் கூட்டத்தில் ஆலய மஹோற்சவ உபயகாரர்கள், விசேட பூசை உபயகாரர்கள் மற்றும் மாதாந்த உபயகாரர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு மேற்படி ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர்.