யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாக் கலைநிகழ்ச்சிகள்

தைப்பொங்கல் பண்டிகைத் திருநாளைச் சிறப்பிக்கும் வகையில் திருமறைக் கலாமன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் பொங்கல் விழாவின் முதலாவது பகுதியான பொங்கல் வைபவம் தைப்பொங்கல் நாளான கடந்த-14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடந்தேறியது. 

அதன் இரண்டாவது பகுதியான பொங்கல் விழாக் கலைநிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை(18.01.2025) மாலை-05 மணி முதல் இல.286, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையகத்தில் இடம்பெறும். இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.  

இதன்போது கிராமிய நடனம், ஒயிலாட்டம், பட்டிமன்றம், பவளத்தேர் இசைநாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.