உடுவில் இந்து இளைஞர் மன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

எமது பாலர் பாடசாலையில் பிரிவு B, பிரிவு A ஆகிய வகுப்புகளில் கல்வி கற்று 2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் 9A பெறுபேறு பெற்றவர்களும், 2023 கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி பெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர்களும் எதிர்வரும்- 26 ஆம் திகதி யாழ்.உடுவிலில் இடம்பெறவுள்ள நாவலர் விழாவில் கெளரவிக்கப்படவுள்ளனர். 

எனவே, 24 ஆம் திகதிக்கு முன்னர் பாலர் பாடசாலை ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு பெயர்களைப் பதிவு செய்யுமாறு உடுவில் இந்து இளைஞர் மன்றத்தினர் கேட்டுள்ளனர்.