துர்க்கை அம்மா வழி வந்த அம்மா எங்கள் துர்க்காதுரந்தரி
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி- உங்கள்
புகழ் பாட எனக்கும் ஒரு வரம் அம்மா
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழில்
துர்க்காதேவி ஆலயத்தின் நிர்வாகப் பதவியை முழுமையாக
ஏற்றுப் பணிகள் பல செய்த பெருந்தகை
இலுப்பம் தோப்பாகவிருந்த மண்ணைத் துர்க்காபுரம் ஆக்கிய
மாபெரும் வள்ளல் துர்க்கா துரந்தரியின்
நூற்றாண்டு காணும் இந் நாட்களில் வணங்கிப் பணிகின்றோம்
வையகம் உள்ளவரை உங்கள் அரும்பணிகளும்
நிலைத்து நிற்கும் இது உறுதி அம்மா!
இறைகவி. செல்வி.சற்குணசிங்கம் நளாஜினி
மயிலணி, சுன்னாகம்.