திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை எதிர்வரும்-25 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைதூதுக் கலையகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்வரும்-23 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்பாகத் தமது பெயர், விபரங்களை யாழ்.திருமறைக் கலாமன்ற அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலதிக விபரங்களுக்குத் திருமறைக் கலாமன்ற அலுவலகம் 0212222393, 0776692657, 0776393620 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் திருமறைக் கலாமன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.