இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள உலக ஊடக புகைப்பட கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்று வருகிறது.
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமாகிய மேற்படி கண்காட்சி இன்று 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இடம்பெறும் மேற்படி கண்காட்சியில் புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள், போர் இடம்பெற்ற நாடுகளில் வாழும் மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் புகைப்படங்கள், புகைப்படத்தின் ஊடாக கதை சொல்லும் புகைப்படங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாணவர்கள், பொதுமக்கள், ஊடகத்துறையினர் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.