ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் முதலாவது தேசிய மாநாடு இன்று மாலை வவுனியாவில் நடைபெற்றது.
ஈழத் தமிழ்க் கலைகளையும், கலைஞர்களையும் சுடர் விட்டுப் பிரகாசிக்கச் செய்யும் நோக்கில் உருவாக்கம் பெற்றுள்ள ஒன்றியத்தின் ஆரம்ப விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 26.01.2025 வவுனியாவில் உள்ள சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் பகல் 1.00 மணி அளவில் ஆரம்பமாகி மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.
நாடெங்கிலுமிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஒன்றியத்தின் யாப்பு நிறைவேற்றப்பட்டதோடு மத்திய மற்றும் பிராந்தியக் குழுக்கள் என்பன தெரிவு செய்யப்பட்டிருந்தன.
நித்திலம் கலையகம் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.